என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
எருது விடும் விழா- போலீஸ் நடத்திய தடியடியில் சிறுவன் படுகாயம்
- டி.எஸ்.பி. அமலா அட்வின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவனுக்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரிநாள் பண்டிகையையொட்டி எருது விடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
அந்த வகையில் போச்சம்பள்ளி அருகேயுள்ள அத்திகானூர் கிராமத்தில் இன்று எருது விடும் விழா நடத்தப்பட்டது.
இதில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர் உள்பட பல்வேறு மாவட்ட இளைஞர்கள் குவிந்தனர்.
டி.எஸ்.பி. அமலா அட்வின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டது.
இதனால் நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் கொத்து கொத்தாக விழுந்தனர். இதையடுத்து அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
இதில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கவுதம் (வயது 12) என்ற சிறுவனுக்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது.
இதையடுத்து அந்த சிறுவனுக்கு அங்கிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிசிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.