என் மலர்
தமிழ்நாடு
ஆளுநர் திடீர் டெல்லி பயணம்- பொன்முடி பதவியேற்பதில் சிக்கல்?
- ஆளுநர் ஆர்.என்.ரவி 16ம் தேதி தான் சென்னை திரும்புகிறார்.
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் எழுதினார்.
தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணத்தால் அமைச்சராக பொன்முடி பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி எம்எல்ஏவாக தொடர்வார் என சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பாணை வெளியிட்டது.
இதைதொடர்ந்து, தமிழக அமைச்சரவையில் பொன்முடி இடம்பெறவும், அமைச்சராக பதவி ஏற்கவும், ஆளுநருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் எழுதினார்.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை காலை டெல்லிக்கு தீடீர் பயணம் மேற்கொள்கிறார்.
நாளை காலை 7.30 மணிக்கு டெல்லி புறப்படும் ஆளுநர் 16ம் தேதி தான் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.
மக்களவை தேர்தலுக்கான தேதி வரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆளுநரின் திடீர் பயணத்தால் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து, பதவியேற்புக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதியும் அவசியம் ஆகும்.
மேலும், தமிழக முதலமைச்சரின் பிரந்துரை கடிதத்தின் மீது ஆளுநர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.