search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாகன ஓட்டிகள் வசதிக்காக 10 இடங்களில் பச்சை நிற நிழல் பந்தல்கள்- கமிஷனர் ராதாகிருஷ்ணன்
    X

    வாகன ஓட்டிகள் வசதிக்காக 10 இடங்களில் பச்சை நிற நிழல் பந்தல்கள்- கமிஷனர் ராதாகிருஷ்ணன்

    • போக்குவரத்து சந்திப்புகளில் நிற்கும் வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
    • சென்னை மாநகராட்சி பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக 199 இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    கோடை வெப்பத்தில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சென்னையில் 10 இடங்களில் பச்சை நிறத்திலான பசுமை நிழல் பந்தல்கள் அமைக்கப்பட உள்ளன.

    சென்னையில் போக்குவரத்து சந்திப்புகளில் நிற்கும் வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களை பாதுகாக்கும் வகையில் இந்த பந்தல்கள் அமைக்கப்பட உள்ளன. இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகளை வெப்பத்தில் இருந்து காப்பதற்காக 10 சந்திப்புகளில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட உள்ளன. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அருகே ராஜா முத்தையா சாலை ஈ.வெ.ரா. பெரியார் சாலை சந்திப்பு, திருமங்கலம் ரவுண்டானா சந்திப்பு, கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை, 3-வது அவென்யூ சந்திப்பு, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம் சேத்துப்பட்டு சந்திப்பு, அடையாறு எஸ்.பி.சாலை-மேற்கு அவென்யூ சாலை சந்திப்பு, திருவான்மியூர் பழைய மாமல்லபுரம் சாலை உள்ளிட்ட 10 இடங்களில் பசுமை நிழற்பந்தல்கள் அமைக்கப்பட உள்ளன. 3 நாட்களில் இதனை அமைக்க முடிவு செய்துள்ளோம்.

    சென்னை மாநகராட்சி பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக 199 இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. 1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×