search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அக்கா- தம்பியின் வெற்றிப் பயணம் தொடரட்டும்..! அமைச்சர் உதயநிதி வாழ்த்து
    X

    அக்கா- தம்பியின் வெற்றிப் பயணம் தொடரட்டும்..! அமைச்சர் உதயநிதி வாழ்த்து

    • 3-வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தினார்.
    • மகளிருக்கான செஸ் பிரிவில் கிளாசிக்கல் ஆட்டத்தில் வைஷாலி வென்றார்.

    நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த 3-வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா கார்ல்சனை எதிர்கொண்டார். வெள்ளை காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார்.

    தொடர்ந்து, மகளிருக்கான செஸ் பிரிவில் கிளாசிக்கல் ஆட்டத்தில் நட்சத்திர வீராங்கனை ஹம்பியை முதல் முறையாக வீழ்த்தி அசத்தினார் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி.

    இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் 5.5 புள்ளிகளுடன் வைஷாலி முதலிடத்தில் இருக்கிறார்.

    நார்வே செஸ் தொடரில் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தாவுக்கும், அவரது சகோதரி வைஷாலிக்கும் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நார்வே செஸ் தொடரில் கலக்கியுள்ள கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    கிளாசிக்கல் செஸ்ஸில் முதல்முறையாக மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தாவும், மகளிர் நார்வே செஸ் அறிமுகப் போட்டியிலேயே ஹம்பி கோனேருவை வீழ்த்தி வைஷாலியும் புதிய சாதனை படைத்துள்ளனர்.

    அக்கா - தம்பியின் வெற்றிப் பயணம் தொடரட்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×