என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தின் மேலாளருக்கு மிரட்டல் விடுத்த செயலாட்சியரின் கார் ஓட்டுனர் கைது
- மேலாளர் அனிதா ஆனந்த் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
- கார் ஓட்டுநர் கோகுல்ராஜ் பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையம் செயல்பட்டு வருகிறது. இதில் மேலாளராக உள்ள அனிதா ஆனந்த் என்பவரை அதே அலுவலகத்தில் செயலாட்சியராக உள்ள தேவகி என்பவரின் கார் ஓட்டுநர் கோகுல்ராஜ் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது.
இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தின் மேலாளர் அனிதா ஆனந்த் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தில் பணியாற்றும் செயலாட்சியர் தேவகிக்கு ஒப்பந்த முறையில் கார் ஓட்டும் கார் ஓட்டுநர் கோகுல்ராஜ் தன்னைப்பற்றி அவதூறு பரப்புவதோடு அலுவலகத்தில் இருந்தபோது தன்னை ஒருமையில் பேசி, "என்னை ஒன்றும் செய்ய முடியாது நான் நினைத்தால் உன்னை கோயம்புத்தூருக்கு பணி மாற்றம் செய்துவிடுவேன்" என மிரட்டினார்.
மேலும், " பெண் என்றும் பாராமல் தன்னை அசிங்கமாக பேசியது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே கோகுல்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகாரில் தெரிவித்து இருந்தார்.
இது குறித்து வேப்பேரி காவல் துறையினர் விசாரணை நடத்தி கோகுல்ராஜ் மீது ஆபாசமாக பேசியது, பெண்ண அவமதிப்பு செய்வது, மிரட்டல், பெண் வன்கொடுமை என 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே சாதாரண ஒப்பந்த கார் ஓட்டுநர் அரசு ஊழியரை மிரட்டும் அளவிற்கு அவருக்கு தைரியம் கொடுத்தது யார் என சக அரசு ஊழியர்கள் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் செயலாட்சியர் தேவகியும், கைது செய்யப்பட்ட கோகுல்ராஜும் ஜூஸ் குடிக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
இதைதொடர்ந்து, ஒப்பந்த கார் ஓட்டுநர் அரசு பணியில் மேலாளராக உள்ளவரை மிரட்டுவதற்கு அதே அலுவலகத்தில் செயலாட்சியராக உள்ள தேவகி காரணமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்