என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நெருங்கிய உறவினர்களுக்கு ஆயுள் தண்டனை
- சிறுமியின் சித்தப்பா மகன்களில் ஒருவருக்கு 10 ஆண்டு சிறையும், மற்றொருவருக்கு 5 ஆண்டு சிறையும் விதித்து நீதிபதி தீர்ப்பு.
- பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு தமிழக அரசு சார்பாக ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நீதிபதி கூறினார்.
சென்னை:
சென்னை மயிலாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெற்றோரை பிரிந்து வாழும் நிலையில் தாத்தாவின் பாராமரிப்பில் வசித்து வந்த 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
இது சம்பந்தமாக அவர் படிக்க கூடிய பள்ளி நிர்வாகம் அளித்த தகவல் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு மையிலாப்பூர் போலிசாரில் புகார் அளித்தார்கள்.
இந்த புகாரின் அடிப்படையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறுமியின் தாத்தா, 3 சித்தப்பாக்கள், சித்தப்பாக்களின் மகன்கள் 2 பேர் உட்பட 6 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. வழக்கை விசாரித்த ராஜலட்சுமி இந்த குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்து சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளதால், போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தாத்தா, 3 சித்தப்பா ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், 1 லட்சத்மு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறார்.
மேலும் சிறுமியின் சித்தப்பா மகன்களில் ஒருவருக்கு 10 ஆண்டு சிறையும், மற்றொருவருக்கு 5 ஆண்டு சிறையும் விதித்து நீதிபதி தீர்பளித்திருக்கிறார்.
இது தவிர பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு தமிழக அரசு சார்பாக ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தள்ளார். தீர்ப்பு அளிக்கப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.






