என் மலர்
தமிழ்நாடு
X
29 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை- வானிலை ஆய்வு மையம்
Byமாலை மலர்30 Oct 2023 5:46 PM IST
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விட்டு, விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.
- தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 29 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விட்டு, விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 29 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தர்மபுரி, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், கோவை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story
×
X