என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஈரோடு கிழக்கு தொகுதியில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்படவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி
- காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
- சட்டசபை உறுப்பினர் இறந்த 15 நாட்களில் அவசரம் அவசரமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்.பி.யான சி.வி.சண்முகம் டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் பெரிய மோசடி நடைபெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள மொத்த வாக்காளர்களில், நான்கில் ஒரு பகுதி வாக்காளர்கள் அந்த தொகுதியில் இல்லை. முறைகேடுகளை சுட்டிக்காட்டி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளோம். குறிப்பாக 6 பூத்களில் உள்ள முறைகேடுகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.
இந்நிலையில், ஈரோடு வீரப்பன்சத்திரம் காவிரி ரோட்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதியில் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளதாக எதிர் அணியில் இருப்பவர்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 936 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 5-ம் தேதி மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் இருக்கிறார்கள். சுமார் 60 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எனவே போலி வாக்காளர்கள் சேர்க்கப்படவில்லை. இந்த தேர்தல் என்பது நேர்மையாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடந்து வருகிறது என தெரிவித்தார்.