search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    222 கோடியே 51 லட்சம் தடவை பெண்கள் இலவச பயணம் செய்துள்ளனர்- அமைச்சர் சிவசங்கர் தகவல்
    X

    222 கோடியே 51 லட்சம் தடவை பெண்கள் இலவச பயணம் செய்துள்ளனர்- அமைச்சர் சிவசங்கர் தகவல்

    • தினசரி 40 லட்சம் பெண்கள் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
    • கொரோனா காலத்தில் நிறுத்தி வைத்த பேருந்துகள் இன்னும் இயக்கப்படாமல் இருந்தால், உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், விராலிமலையில் இருந்து துவரங்குறிச்சி வரை நகரப் பேருந்துகள் இயக்க அரசு ஆவண செய்யுமா எனவும், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-

    விராலிமலையில் இருந்து துவரங்குறிச்சி செல்லும் தூரம் 32 கிலோ மீட்டர். இது திருச்சி, மதுரை தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழித்தடம் என்பதால் 5 முதல் 10 நிமிடத்திற்கு ஒரு முறை புறநகர் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மூன்று நகர பேருந்துகள் இயக்கப்படு கிறது. கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், தி.மு.க. அரசு பொறுப்பேற்றப்பின், திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை 222 கோடியே 51 லட்சம் பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொண்டு உள்ளனர். தினசரி 40 லட்சம் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    கொரோனா காலத்தில் நிறுத்தி வைத்த பேருந்துகள் இன்னும் இயக்கப்படாமல் இருந்தால், உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×