search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    10 நாட்களில் துணை முதலமைச்சராவார் உதயநிதி ஸ்டாலின்- அமைச்சர் தா.மோ.அன்பரசன்
    X

    10 நாட்களில் துணை முதலமைச்சராவார் உதயநிதி ஸ்டாலின்- அமைச்சர் தா.மோ.அன்பரசன்

    • பவள விழா பொதுகூட்ட நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
    • திடீரென நடத்தப்பட்ட கூட்டம் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

    காஞ்சிபுரம்:

    தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) , காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி திடலில் நடைபெறுகிறது.

    தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் குறித்த முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, க.பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதில் பவள விழா பொதுகூட்ட நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியதாக தெரிகிறது.

    திடீரென நடத்தப்பட்ட இந்த கூட்டம் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. காரணம், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாக தொடர்ந்து வெளியாகி வரும் தகவலால் தான்.

    சமீபத்தில் சென்னையில் நடந்த தி.மு.க. பவள விழாவில் பேசிய முன்னாள் மத்திய இணை மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், 'அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து தி.மு.க.வில் மீண்டும் இந்த பேச்சு எழ தொடங்கியது.

    இதையடுத்து சென்னை கோட்டூபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி, எனக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய முடிவு எடுப்பார்' என்று கூறினார்.

    இந்நிலையில் காஞ்சிபுரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அடுத்த 10 நாட்களில் அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சராக அறிவிக்கப்படுவார். நாளை கூட அறிவிப்பு வெளியாகலாம். இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்.

    10 நாட்களில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

    Next Story
    ×