search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தெற்காசியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது: முதல்வர் ஸ்டாலின்
    X

    தெற்காசியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது: முதல்வர் ஸ்டாலின்

    • ஸ்ரீபெரும்புதூரில் பெண் பணியாளர்கள் தங்கும் விடுதியை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
    • இந்தியாவிலேயே 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது என்றார்.

    காஞ்சிபுரம்:

    பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில் பெண் பணியாளர்கள் தங்கும் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் ஸ்ரீபெரும்புதூர் வல்லம்-வடிகால் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது. இதில் 18,720 பெண் பணியாளர்கள் தங்கி பயன்பெறும் வகையில் மிக பிரமாண்டமாக இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது.

    இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தக் குடியிருப்பு வளாகத்தை திறந்துவைத்தார். விழாவில் பாக்ஸ்கான் நிறுவன தலைவர் யாங் லீயு முன்னிலை வகித்தார்.

    பெண் பணியாளர்கள் தங்கும் விடுதியை திறந்துவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் பாக்ஸ்கான் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஐபோன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்தியாவிலேயே 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது.

    தொழில் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தியும், தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.

    மத்திய அரசின் நிதி ஆயோக் குறியீட்டில் தொழில் வளர்ச்சியில் முதல் 10 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

    இந்தியாவில் தொழிற்சாலைகளில் பெண் பணியாளர்கள் தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

    பெண்களுக்கான புதுமையான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

    தெற்கு ஆசியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    Next Story
    ×