என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
ஒரே தேர்வு மையத்தில் குரூப்-4 தேர்வு எழுதிய தாய்-மகள்
Byமாலை மலர்25 July 2022 8:54 AM IST
- கடந்த முறை வளர்மதி டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வு எழுதி 160-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளார்.
- டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அரசு அறிவிப்பு வெளியான உடன் தாயும் மகளும் குரூப்-4 போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
மதுரை:
மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ரவி. இவருடைய மனைவி வளர்மதி(வயது 47) இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 3 குழந்தைகள் பிறந்த பின்பு வளர்மதி, பி.ஏ. தமிழ் படித்துள்ளார். தற்போது இவருடைய மகள் சத்யபிரியா பிளஸ்-2 படித்துவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகி தேர்வு எழுதி உள்ளார். கடந்த முறை வளர்மதி டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வு எழுதி 160-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளார்.
இந்தநிலையில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அரசு அறிவிப்பு வெளியான உடன் தாயும் மகளும் குரூப்-4 போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கு கள்ளிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரே தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஹால் டிக்கெட் வந்தது. இதையடுத்து நேற்று அந்த மையத்தில் தாயும்-மகளும் குரூப்-4 தேர்வு எழுதினர்.
Next Story
×