search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தகாத உறவை கண்டித்தால் சிக்கன் ரைஸில் விஷம்- தாத்தாவை தொடர்ந்து தாயும் உயிரிழப்பு
    X

    தகாத உறவை கண்டித்தால் சிக்கன் ரைஸில் விஷம்- தாத்தாவை தொடர்ந்து தாயும் உயிரிழப்பு

    • இருவரும் செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர்.
    • கைது செய்யப்பட்டுள்ள மகன் பகவதியை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

    நாமக்கல் பஸ் நிலையம் எதிரில் ஜீவானந்தம் (வயது 32) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் கடந்த 30-ந் தேதி எருமப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவதி (20) சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார்.

    தொடர்ந்து, 7 'சிக்கன் ரைஸ்' பொட்டலம் வாங்கி கொண்டு, வீட்டில் உள்ள தனது தாயார் நதியா (40), தாத்தா சண்முகம் (67) உள்ளிட்ட குடும்பத்தினருக்கு கொடுத்து உள்ளார். இதற்கிடையே 'சிக்கன் ரைஸ்' சாப்பிட்ட நதியா, சண்முகம் ஆகியோருக்கு மட்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கூலித்தொழிலாளி சண்முகம் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    மேலும், இந்த விவகாரத்தில் தாத்தாவை தொடர்ந்து தாய் நதியாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நதியா உயிரிழந்துள்ளார்.

    கைது செய்யப்பட்டுள்ள மகன் பகவதியை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

    Next Story
    ×