என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மியூசிக் அகாடமியின் 96வது ஆண்டு விழா: கருத்தரங்கம், கச்சேரியை துவக்கி வைத்து முதலமைச்சர் உரை
- இசை வளர்த்தல் என்பது கலை வளர்த்தல், கலை வளர்த்தல் என்பது பண்பாட்டை வளர்த்தல், பண்பாட்டை வளர்த்தல் என்பது நமது நாகரீகத்தை வளர்த்தல்.
- ஆண்டுதோறும் மார்கழி மாதம் இந்தியாவில் இருந்து மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள இசை கலைஞர்களை வரவழைக்க கூடிய வேடந்தாங்கலாக மியூசிக் அகாடமி செயல்படுகிறது.
சென்னை:
சென்னை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியின் 96வது ஆண்டு விழா கருத்தரங்கம், கச்சேரியை துவக்கி வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
மியூசிக் அகாடமி இசைக்கலை ஒன்றியத்தின் 96வது ஆண்டு ஆண்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைக்கிறேன். இங்கு திரு. முரளி அவர்கள் குறிப்பிட்டது போல 1975ம் ஆண்டு நடந்த ஆண்டு விழாவிலும், 1996ம் ஆண்டு நடந்த ஆண்டு விழாவிலும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தியிருக்கிறார்.
அந்த வகையில் இந்த 96வது ஆண்டு விழாவில் நான் பங்கெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன். 1927ம் ஆண்டு நடந்த இசை மாநாட்டில் இந்திய இசையை வலுசேர்ப்பதற்காக இப்படி ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று நினைத்து உருவாக்கியிருக்கிறார்கள். எந்த அமைப்பாக இருந்தாலும் அதனை உருவாக்குவது எளிது. ஆனால் தொடர்ந்து நடத்துவதுதான் சிரமம். 96 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தியிருக்கும் அனைவரையும் வணங்குகிறேன், வாழ்த்துகிறேன்.
இன்னும் 4 ஆண்டுகளில் இந்நிகழ்ச்சி என்பது நூற்றாண்டு விழாவாக நடைபெற போகிறது. அதிலும் நான் உறுதியாக கலந்துகொள்வேன் என்று நம்புகிறேன்.
ஆண்டுதோறும் மார்கழி மாதம் இந்தியாவில் இருந்து மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள இசை கலைஞர்களை வரவழைக்க கூடிய வேடந்தாங்கலாக இந்த மியூசிக் அகாடமி இன்றைக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இசை வளர்த்தல் என்பது கலை வளர்த்தல், கலை வளர்த்தல் என்பது பண்பாட்டை வளர்த்தல், பண்பாட்டை வளர்த்தல் என்பது நமது நாகரீகத்தை வளர்த்தல் அந்த வகையில் மக்கள் மனதையும், இந்த மாநிலத்தையும் பண்படுத்தும் கடமையை இது போன்ற இசை கலை மன்றங்கள் செய்து வருவது மிகப்பெரிய தொண்டு.
மியூசிக் அகாடமி போன்ற இசைக் கலை அமைப்புகளை ஏதோ பொழுதுபோக்கு அமைப்பு என்று சொல்லமுடியாது. இவை அனைத்து நமது பண்பாட்டை வளர்க்க கூடியவை. இந்த நிகழ்ச்சியில் விருதுகளை பெற்ற அனைத்து இசை கலைஞர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திரையுலகின் மிகப்பெரிய விருது மியூசிக் அகாடமி விருது என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக அறிந்ததே. அத்தகைய உரிய விருது பெற்றுள்ள நீங்கள் அனைவரும் தொடர்ந்து இத்துறைக்கு தொண்டாற்றி உங்களை போன்ற திறமைசாலிகளை உருவாக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்