search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முன்கூட்டியே தொடங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி - எப்போது தெரியுமா?
    X

    முன்கூட்டியே தொடங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி - எப்போது தெரியுமா?

    • ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்
    • மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன

    ஊட்டி:

    மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் குளுகுளு கோடை சீசன் நிலவும்.

    இந்த சீசனை அனுபவிக்க தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

    ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.

    இந்தாண்டுக்கான மலர் கண்காட்சி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அடுத்த மாதம் 17-ந்தேதி தொடங்கி 22-ந் தேதி வரை 6 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், தற்போது மலர் கண்காட்சி மே 10ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறும் என நீலகிரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    ஏற்கனவே மே 17ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×