search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்
    X

    பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்

    • பழனி நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது.
    • தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

    பழனி:

    பழனி மலை மீது அமர்ந்து பக்தர்களுக்கு முருகப்பெருமான் காட்சி தருகிறார். மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை மற்றும் ரோப்கார், மின்இழுவை ரெயில் வசதிகளும் உள்ளன. பழனியில் தமிழக இந்து சமயஅறநியைத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து பழனியில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மாநாட்டையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன. பழனி மலைக்கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. பழனி நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது.

    அதன்படி தமிழக இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' பழனியில் இன்று தொடங்குகிறது.

    பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று காலை 9 மணியளவில் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்ற உள்ளார். அதைத்தொடர்ந்து மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற உள்ளன.

    'உலக பைந்தமிழர்களை இணைத்து முருகன் மாநாட்டை நடத்துவது மகிழ்ச்சி' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.'

    பழனியாண்டவர் கலை-பண்பாட்டு கல்லூரியில் அமைக்கப்பட்ட மாநாட்டு அரங்கத்தில் காலை 8.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், நாதஸ்வரம்-தவில் மங்கள இசையுடன் மாநாடு தொடங்குகிறது.

    காலை 8.55 மணிக்கு ரத்தினகிரி பாலமுருகனடி சுவாமிகள் மாநாட்டு கொடியை ஏற்றி வைக்கிறார்.

    தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி முன்னிலை வகிக்கிறார். திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் வேல் கோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். பின்னர் 9.30 மணிக்கு சீர்காழி கோ.சிவசிதம்பரத்தின் இறைவணக்கத்துடன் மாநாடு தொடங்குகிறது.

    Next Story
    ×