search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புரட்டாசி 2-வது சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
    X

    புரட்டாசி 2-வது சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

    • கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர்.

    திருவொற்றியூர்:

    புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில், புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் இன்று காலையிலேயே பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    திருவொற்றியூர் காலடிப்பேட்டை பெருமாள் கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையை யொட்டி, மயில் தோகையில் மாலை, கிரீடம், ஜடை என பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருவொற்றியூர் காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பெருமாளுக்கு பழங்களாலும் வண்ண வண்ண மலர்களாலும் விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது.

    புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு உற்சவர் பவளவண்ண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஆண்டாள் தாயார் உற்சவர்களுக்கு மயில் தோகைகளால் மாலை, கிரீடம், ஜடை உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    புரட்டாசி ஏகாதசி சனிக்கிழமையை யொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×