search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

    • தமிழகத்தில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்க வேண்டும்.
    • காலாண்டு விடுமுறைக்கு பின்னர் அக்டோபர் 7-ந்தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    முன்னதாக, கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வுக்கு பிறகு 9 நாட்கள் விடுமுறை விடப்படும். ஆனால், நடப்பாண்டு, செப்டம்பர் 28-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி வரையில் 5 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வந்துவிடுகிறது. அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் அன்று அரசு விடுமுறை. இடையில் 2 நாட்கள் மட்டுமே காலாண்டு தேர்வு விடுமுறையாக உள்ளது என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறையின் முதன்மை செயலாளரிடம் பேசி பின்னர் அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் காலாண்டு விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    காலாண்டு விடுமுறை அக்டோபர் 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறைக்கு பின்னர் அக்டோபர் 7-ந்தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும்.

    காலாண்டு தேர்வு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுத்த நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×