search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக-கர்நாடக எல்லையில் சாலை மறியலில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் 70 பேர் கைது
    X

    இன்று கன்னட அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

    தமிழக-கர்நாடக எல்லையில் சாலை மறியலில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் 70 பேர் கைது

    • கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில் இன்று முழு அழைப்பு போராட்டம் நடைபெற்றது.
    • கன்னட கூட்டமைப்புகளின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    ஓசூர்:

    காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில் இன்று முழு அழைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.

    கர்நாடகத்தில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் கன்னட அமைப்புகளின் சார்பில் சமீப நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று, கர்நாடக ரக்ஷன வேதிகே (சிவராம் கவுடா அணி) கன்னட ஜாக்ருதி வேதிகே, மற்றும் கன்னட கூட்டமைப்புகளின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    முன்னதாக, அத்திப்பள்ளியிலிருந்து மாநில தலைவர் சிவராம் கவுடா, மஞ்சுநாத் தேவா, நாகராஜ் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக வந்த கன்னட அமைப்பினர், பின்னர் திடீரென தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில், பெண்கள் உள்பட சுமார் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×