என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![கை அழுகிய விவகாரம்- அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் கை அகற்றம் கை அழுகிய விவகாரம்- அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் கை அகற்றம்](https://media.maalaimalar.com/h-upload/2023/07/02/1908449-gh.webp)
X
கை அழுகிய விவகாரம்- அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் கை அகற்றம்
By
மாலை மலர்2 July 2023 4:12 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 2 மணி நேரம் அறுவை சிகிச்சையில் குழந்தையின் அழுகிய கை அகற்றப்பட்டது.
- அறுவை சிகிச்சை நிறைவு பெற்ற நிலையில் குழந்தை தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக தகவல்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1½ வயது குழந்தைக்கு கையில் டிரிப்ஸ் ஏற்றியதில் தவறுதலாக ஊசி போட்டதால் அந்த குழந்தையின் கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர்களின் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, குழந்தைக்கு மயக்க மருந்து எனப்படும் அனஸ்தீசியா கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
2 மணி நேரம் அறுவை சிகிச்சையில் குழந்தையின் அழுகிய கை அகற்றப்பட்டது.
இந்நிலையில், அறுவை சிகிச்சை நிறைவு பெற்ற நிலையில் குழந்தை தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
X