என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
அன்னிய ஊடுருவல்-கடத்தல் சம்பவங்களை தடுக்க "சஜாக்" பாதுகாப்பு ஒத்திகை
- கஞ்சா, போதைப் பொருட்கள் கடத்துவது, இங்கிருந்து மருந்துகள், மஞ்சள், பீடி இலை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கடத்துவது நடந்து வருகிறது.
- மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவு பகுதியிலும் போலீசார் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.
தொண்டி:
தமிழகத்தில் 180 கி.மீ. நீள கடற்கரை மாவட்டமாக ராமநாதபுரம் விளங்கி வருகிறது. இங்கு ராமநாதபுரம், ஏர்வாடி, கீழக்கரை, ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மீனவர்கள் வாரத்தில் 3 நாட்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.
அண்டை நாடான இலங்கை, ராமநாதபுரத்துக்கு கடல் வழியாக 20 மைல் தொலைவில் உள்ளது. இதன் காரணமாக கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இலங் கையில் இருந்து கஞ்சா, போதைப் பொருட்கள் கடத்துவது, இங்கிருந்து மருந்துகள், மஞ்சள், பீடி இலை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கடத்துவது நடந்து வருகிறது.
இதனை தடுக்க கடலோர காவல்படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் இலங்கையில் இருந்து அகதிகளாகவும் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கண்காணிக்கவும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.
ராமநாதபுரம் மாவட்டத் தில் எஸ்.பி.பட்டனம் முதல் சாயல்குடி ரோஸ்மா நகர் வரை கடற்கரை உள்ளது. பாக் நீரினை, மன்னார் வளைகுடா பகுதிகளை உள்ளடக்கிய இந்தப்பகுதியில் அன்னிய ஊடுருவல், கடத்தல்களை தடுக்க இன்று கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் "சஜாக்" என்ற ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. கூடுதல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் யாசர் மவுலானா, அய்யனார், முகமது தாரிக், கண்ணன் மற்றும் 60-க்கும் மேற்பட்ட கடலோர போலீசார் 4 குழுக்களாக பிரிந்து அதிவேக படகுகளில் கடலில் ரோந்து சென்று கண்காணிப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
அப்போது கடற்கரை பகுதிகளில் புதிய நபர்கள் நடமாட்டம் குறித்து மீனவர்கள் உடனடியாக கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கடற்கரையில் இருந்து 7 கடல் மைல் தொலைவில் "சஜாக்" பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. மேலும் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவு பகுதியிலும் போலீசார் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்