search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மனிதக்கழிவு கலந்ததாக கூறப்பட்ட பள்ளிக்கூட குடிநீர் தொட்டி இடித்து அகற்றம்
    X

    மனிதக்கழிவு கலந்ததாக கூறப்பட்ட பள்ளிக்கூட குடிநீர் தொட்டி இடித்து தரைமட்டமாக்கப்பட்ட இடத்தை காணலாம்.

    மனிதக்கழிவு கலந்ததாக கூறப்பட்ட பள்ளிக்கூட குடிநீர் தொட்டி இடித்து அகற்றம்

    • குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு எதுவும் கலக்கப்படவில்லை.
    • குடிநீருக்காக வேறு தொட்டி உள்ளது.

    உத்திரமேரூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கத்தை அடுத்த திருவந்தவார் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் 96 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இந்த பள்ளிக்கூட்டத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர், உத்திரமேரூர் தாசில்தார் ஞானவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர்.

    ஆய்வுக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கலெக்டர் கலைச்செல்வி மோகன், குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு எதுவும் கலக்கப்படவில்லை. பறவைகள் அழுகிய முட்டையை எடுத்து வந்து குடிநீர் தொட்டியில் போட்டு இருக்கலாம். குடிநீருக்காக வேறு தொட்டி உள்ளது. ஆகவே இந்த குடிநீர் தொட்டியை இடித்து விடும்படி கூறியிருக்கிறேன். மேலும் அதே இடத்தில் புதிதாக வேறு ஒரு குடிநீர் தொட்டி அமைக்க உத்தரவிட்டுள்ளேன். தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார்.

    இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் அதிகாரிகள் முன்னிலையில் மனிதக்கழிவு கலந்ததாக கூறப்பட்ட குடிநீர் தொட்டி பொக்லைன் எந்திரம் மூலம் முற்றிலுமாக இடித்து அகற்றப்பட்டது.

    Next Story
    ×