search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செல்லூர் ராஜூ
    X

    பிரதமர் மோடியை விமர்சித்து திமுக நிர்வாகியின் வீடியோவை பகிர்ந்த செல்லூர் ராஜூ

    • மோடி அரசு செய்த துரோகங்கள் என்னென்ன தெரியுமா என்று வீடியோ.
    • செல்லூர் ராஜூவின் ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பிரதமர் மோடி நேற்று 3வது முறையாக பதவி ஏற்றுக் கொண்டார். பிரதமரின் தலைமையின் கீழ் புதிதாக அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

    இந்நிலையில், மோடி அரசு செய்த துரோகங்கள் என்னென்ன தெரியுமா என்று பெண் ஒருவர் பேசும் வீடியோவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி ஜி தலைமையிலான அரசு இனிமேலாவது தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்யுமா? திமுக கூட்டணி எம்.பிகள் குரல் எழுப்புவார்களா? பார்ப்போம் என்று பகிர்ந்துள்ளார்.

    பிரதமர் மோடியை விமர்சித்து திமுக எம்.பியின் வீடியோவை பகிரிந்த செல்லூர் ராஜூவின் ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    முன்னதாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராகுல் காந்தி ஒரு ஓட்டலில் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு, `நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி' என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவுடன் கூடிய கருத்து சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

    இதையடுத்து, ஒரு சில மணி நேரத்தில் பதிவை செல்லூர் ராஜூ தனது எக்ஸ் பக்கத்தில் இருந்து நீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×