search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாமக்கல் மாவட்டம் முழுவதும் சிறு குறு தொழிற்சாலைகள் இன்று அடைப்பு
    X

    நெத்திமேடு பகுதியில் உள்ள ஒரு அரிசி ஆலையில் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    நாமக்கல் மாவட்டம் முழுவதும் சிறு குறு தொழிற்சாலைகள் இன்று அடைப்பு

    • லாரி பாடி கட்டுமானத்தில் ஈடுபடும் நிறுவனங்களும் போராட்டத்தில் பங்கேற்றன.
    • இன்று சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்தனர்.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத்தின் சார்பில் முதல்-அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் இன்று உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டன.

    அதுபோல் லாரி பாடி கட்டுமானத்தில் ஈடுபடும் நிறுவனங்களும் போராட்டத்தில் பங்கேற்றன.

    இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்ட சிறு குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக இன்று சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்தனர்.

    Next Story
    ×