என் மலர்
தமிழ்நாடு
X
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
Byமாலை மலர்29 Oct 2023 7:32 AM IST
- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக 14 மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைதுசெய்தது.
- மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம்:
எல்லை தாண்டி சென்று மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்தது.
நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
அவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X