என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
வெற்றியின் முகட்டில் நிற்கிறோம் - பாசிச பா.ஜ.க. வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்! : மு.க.ஸ்டாலின்
- டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனை நடந்த உள்ளனர்
- "இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது"
இந்தியாவில் 7 கட்டங்களாக நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு 6 கட்டங்களில் தேர்தல் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு இன்று(ஜூன் 1) கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து வருகிற 4-ந் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு வலுவான எதிர்ப்புக் குரலாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியை உருவாக்கி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தியா கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் பிரதமர் வேட்பாளராக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்தும் டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனை நடந்த உள்ளனர். இந்த கூட்டத்தில் தி.மு.க சார்பில் மாநிலங்களவை எம்.பி டி.ஆர்.பாலு கலந்துகொள்ள நேற்று (மே 31) விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜகவின் பாசிச ஆட்சியை வீழ்த்த இன்னும் சில நாடுகளே உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கையின்போது இந்தியா கூட்டணியினர் விழுப்புடன் செயல்பட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது,
பா.ஜ.க.வின் பத்தண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது. தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பா.ஜ.க.வுக்கு எதிராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணிதிரளாக அது அமைந்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது.
தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பா.ஜ.க. உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான விழிப்புணர்வுடன் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
ஜூன் 4 - இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும். இது தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கழகப் பொருளாளரும் - நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கிறார்.
பாசிச பா.ஜ.க. வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்! என்று பதிவிட்டுள்ளார்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்