search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தமிழகத்தில் 4 நாட்கள் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்- காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்
    X

    தமிழகத்தில் 4 நாட்கள் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்- காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்

    • அ.தி.மு.க. 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் 17-ந்தேதி நடக்கிறது.
    • திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அமைப்பு செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன் ஆகியோரும் பேசுகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் போற்றி வளர்க்கப்பட்டு, பல்வேறு வரலாற்றுச் சாதனைகளைப் படைத்திட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமான அ.தி.மு.க. வருகிற 17-ந்தேதி 53-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

    எனவே அன்று முதல் வருகிற 20-ந்தேதி வரை 4 நாட்கள் அ.தி.மு.க. 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும், கட்சி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

    கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும்; 17-ந்தேதி ஆங்காங்கே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவச் சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கியும்; ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அ.தி.மு.க. 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் 17-ந்தேதி நடக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். இதேபோல், திருவண்ணாமலை கிழக்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியும், திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எம்.புத்திசந்திரன் ஆகியோரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அமைப்பு செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன் ஆகியோரும் பேசுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×