search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விபத்தில் இறந்த காட்டுப்பன்றியை எடுத்துச்சென்ற மர்ம நபர்கள்- வனத்துறை விசாரணை
    X

    விபத்தில் இறந்த காட்டுப்பன்றி.

    விபத்தில் இறந்த காட்டுப்பன்றியை எடுத்துச்சென்ற மர்ம நபர்கள்- வனத்துறை விசாரணை

    • வனத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் வனவிலங்குகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கை இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
    • காட்டுப்பன்றி இறைச்சிக்காக மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டி, மேலக் கோட்டை, ஆலம்பட்டி, ராயபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மான்கள், மயில்கள் காட்டுப்பன்றிகள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த பகுதிகளில் காட்டுப்பன்றி, மான்கள் குடிநீருக்காக அடிக்கடி கிராமங்களுக்கு வருவதுண்டு. அவ்வாறு வரும் விலங்குகள் ரோட்டை கடக்கும்போது வாகன விபத்தில் சிக்கி உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது.

    இதுதொடர்பாக வனத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் வனவிலங்குகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கை இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கரிசல்பட்டி விலக்கு அருகே தனியார் நிறுவனத்தின் எதிரே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 3 வயதுடைய காட்டுப்பன்றி இறந்து கிடந்தது.

    இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜனிடம் தகவல் தெரிவித்தனர். அவர் சம்பவ இடத்திற்குள் வருவதற்குள் இறந்த கிடந்த காட்டுப்பன்றியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.

    அதிர்ச்சி அடைந்த பாண்டியராஜன் உசிலம்பட்டி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உசிலம்பட்டி வனவர் ஜெய்சங்கர் தலைமையிலான வனத்துறையினர் காட்டுப்பன்றி இறைச்சிக்காக மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×