search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அனைத்து தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு- அமைச்சர்
    X

    அனைத்து தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு- அமைச்சர்

    • உடனடியாக அப்பகுதிக்கு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சென்று, பரிசோதனை நடத்தினர்.
    • தனியார் கம்பெனி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.

    திருச்சி:

    சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வாயு கசிவு ஏற்பட்டது குறித்து சுற்று சூழல் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:-

    அமோனியா கசிவு ஏற்பட்ட நிலையில் 15 நிமிடத்தில் ஆலை நிர்வாகம் அதனை சரி செய்துள்ளது. இந்த வாயு கசிவால் 18 பேர் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனடியாக அப்பகுதிக்கு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சென்று, பரிசோதனை நடத்தினர்.

    அப்போது அப்பகுதியில் பூஜ்யம் சதவீதம் அமோனியா இல்லை என்று கண்டறியபட்டது. எனவே விபத்து ஏற்பட்ட போதிலும் அது உடனடியாக சரிசெய்யபட்டது.

    அந்த தனியார் தொழி சாலை ரெட் கேட்டகிரியில் உள்ளது. இதே போல ரெட் கேட்டகிரியில் இருக்கும் அனைத்து தொழிற்சாலைகளும், மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும். அதே சமயம் இது போன்ற விபத்துகள் ஏற்படும் போது, அதனை தடுக்க நவீன தொழில்நுட்ப அம்சங்கள் உடனடியாக பயன்படுத்தும் நிலையில் உள்ளதா என்பது குறித்து ஒரு குழு அமைத்து வல்லூனர்கள் உதவியுடன் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

    இரவில் இருந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் அங்கு உள்ளனர். மேலும் அந்த தனியார் கம்பெனி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. சல்ப்யூரிக் ஆசிட் பிளாண்ட் மட்டும் உடனடியாக மூட முடியாது என்பதால் படிப்படியாக மூடும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. எதிர் காலத்தில் இது போன்று விபத்துகள் நடைபெறாமல் இருக்க என்ன நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்பதை விரைவில் அறிவிப்போம். அங்கு மட்டும் அல்லாமல், நிரந்தர தீர்வை எட்டும் வகையில் இந்த ஆய்வு தமிழக முழுவதும் நடை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×