என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![தேசிய கீதத்தை மதிக்காததால் நாமக்கல் காவல் உதவி ஆய்வாளர் இடைநீக்கம் தேசிய கீதத்தை மதிக்காததால் நாமக்கல் காவல் உதவி ஆய்வாளர் இடைநீக்கம்](https://media.maalaimalar.com/h-upload/2023/01/31/1828972-suspend.webp)
X
தேசிய கீதத்தை மதிக்காததால் நாமக்கல் காவல் உதவி ஆய்வாளர் இடைநீக்கம்
By
மாலை மலர்31 Jan 2023 8:58 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- காவல் உதவி ஆய்வாளர் தேசிய கீதத்தை மதிக்கவில்லை என்று புகார் எழுந்தது.
- உதவி ஆய்வாளரை இடைநீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி அதிரடியாக உத்தரவிட்டார்.
நாமக்கல்லில் கடந்த 28ம் தேதி அன்று அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, நாமக்கல்லை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் சிவபிரகாசம் தேசிய கீதத்தை மதிக்காமல் சேரில் அமர்ந்து செல்போனில் பேசியபடி இருந்தார். போனில் பேசி முடித்துவிட்டு சாவகாசமாக எழுந்து நின்றார். இதனை வீடியோ பதிவு செய்தவர், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோர் வைரலானது.
காவல் உதவி ஆய்வாளர் தேசிய கீதத்தை மதிக்கவில்லை என்று புகார் எழுந்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளரை இடைநீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி அதிரடியாக உத்தரவிட்டார்.
Next Story
×
X