search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உசிலம்பட்டியில் 100 நாட்டு நாய்களை வளர்ப்பவருக்கு விருது
    X

    உசிலம்பட்டியில் 100 நாட்டு நாய்களை வளர்ப்பவருக்கு விருது

    • 100 நாட்டு இன நாய்களை வளர்ப்பதற்காக சதீசுக்கு இந்த ஆண்டுக்கான இனப்பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
    • 45 நாட்களுக்கு குறைவான வயது கொண்ட ராஜபாளையம் நாய்க்குட்டி ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள புதூர் மலையின் அடி வாரத்தில் கே.பொத்தாம்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஏ.சதீஷ். இவர் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிகிறார். அதே நேரத்தில் தனது சொந்த கிராமத்தில் நாய் பண்ணையில் 100 நாட்டு நாய்களை வைத்து வளர்த்து வருகிறார். இவரிடம் ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, மண்டை உள்ளிட்ட இனங்களில் நாட்டு நாய்கள் உள்ளன. இதில் கன்னி, சிப்பிப் பாறை ஆகிய வகை நாய்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்தவை. கோம்பை இன நாய் தேனி மாவட்டத்தை சேர்ந்தது. மண்டை வகை நாய்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவை.

    100 நாட்டு இன நாய்களை வளர்ப்பதற்காக சதீசுக்கு இந்த ஆண்டுக்கான இனப்பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவரிடம் உள்ள 45 நாட்களுக்கு குறைவான வயது கொண்ட ராஜபாளையம் நாய்க்குட்டி ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. கோம்பை, மண்டை நாய் குட்டிகள் 6 ஆயிரத்துக்கும், கன்னி, சிப்பிப் பாறை நாய்க்குட்டிகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் விற்கப்படுகிறது.

    இந்த அனைத்து நாய்களுக்கும் யுனைடெட் கென்னட் கிளப் ஆப் இந்தியா மற்றும் கென்னட் கிளப் ஆப் இந்தியா ஆகியவற்றால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழில் நாய்களின் பெற்றோரின் வம்சாவளி மற்றும் பிறந்த தேதி போன்ற விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

    இங்கு வளர்க்கப்பட்ட 2 சிப்பிப் பாறை நாய்க்குட்டிகள் பயிற்சி அளிக்கப்பட்டு தமிழ்நாடு வனத்துறையில் சேர்க்கப்பட்டுள்ளன. தஞ்சாவூரில் உள்ள விமான தளத்தில் ஓடு பாதைகளை பறவைகள் இல்லாமல் வைத்திருக்க ராஜபாளையம் நாய் பயன்படுத்தப்படுகிறது.

    மேலும் இங்கிருந்து ஏற்கனவே 1000-க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகளை பலர் வாங்கி சென்றுள்ளனர்.

    Next Story
    ×