என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பழிவாங்கும் மத்திய பட்ஜெட்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
- ஒரு நல்ல அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்த மக்களுக்கும் சேர்ந்தே பாடுபட வேண்டும்.
- தமிழகத்தை பா.ஜ.க. புறக்கணித்தால் மேலும் தோல்வியை பா.ஜ.க. சந்திக்கும்.
சென்னை:
நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-
மத்திய பா.ஜ.க. அரசின் மாற்றந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால் நீதி கேட்டு மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசு கடந்த மூன்றாண்டு காலமாக எத்தகைய முற்போக்கு மற்றும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருவது தெரியும்.
தமிழ்நாடு அரசின் திட்டங்களின் பயன்கள், ஒவ்வொரு குடும்பத்துக்கும்- ஒவ்வொரு குடிமகனுக்கும் நேரடியாகக் கிடைக்கிறது.
தமிழ்நாடு அரசின் எண்ணங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களை மத்திய அரசு தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது. ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான இலக்கணத்தை நான் அடிக்கடி சொல்லிக்கொண்டு வருகிறேன்.
ஒரு நல்ல அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்த மக்களுக்கும் சேர்ந்தே பாடுபட வேண்டும்.
மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வருவதற்கு முன்பு இருந்த எல்லா மத்திய அரசுகளும் கூட அப்படித்தான் இருந்தன. ஆனால் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மட்டும் தான் அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்துகிறார்கள். 3-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க. அரசுக்கு மக்கள் பெரும்பான்மை அளிக்கவில்லை.
ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும் உருவாக்க வேண்டிய பட்ஜெட்டை 'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்த மக்களைப் பழிவாங்க உருவாக்கி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டிலாவது வெள்ள நிவாரண அறிவிப்பு வெளியாகுமெனக் காத்திருந்தோம். ஆனால் தங்களின் பதவி நாற்காலிக்கு, கால்களாக இருக்கும் மாநிலங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கும் மேல் நிதியை அள்ளி வழங்கியுள்ளார் நிதி அமைச்சர். தமிழ்நாட்டுக்கென எந்த சிறப்புத் திட்டத்தையும் கொடுக்காமல், தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என எப்படித்தான் எதிர்பார்கிறார்களோ தெரியவில்லை. தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் வழங்காமல் வாக்குகளை மட்டும் பா.ஜ.க. எதிர்பார்க்கிறது. மேலும் தமிழகத்தை பா.ஜ.க. புறக்கணித்தால் மேலும் தோல்வியை பா.ஜ.க. சந்திக்கும்.
பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயரும் இல்லை, குறளும் இல்லை. திருவள்ளுவர் பா.ஜ.க.வுக்கு கசந்துவிட்டார். இதுபோன்ற பட்ஜெட்டில் திருக்குறள் இடம் பெறாதது நிம்மதி அளிக்கிறது.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தலைநகரில் @NITIAayog கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நாளில், ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சனையால், நீதி கேட்டு மக்கள் மன்றத்தில்…#UnfairBudget4TN pic.twitter.com/L2rqtORNvD
— M.K.Stalin (@mkstalin) July 27, 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்