என் மலர்
தமிழ்நாடு

காவிரி விவகாரத்தில் உறுதியாக இருக்கிறோம்: சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

- காவிரி டெல்டா பகுதியில் உள்ள அனைத்து வாய்க்கால் பகுதிகளிலும் திட்டமிடப்பட்டு தூர்வாரப்பட்டதால் கடைமடை வரை மேட்டூர் அணை நீர் சென்றது.
- அரசு பொறுப்பேற்ற பிறகு காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மேட்டூர் அணையை சீராக திறந்து விடப்பட்டு வருகிறது.
சென்னை :
தமிழக சட்டசபையில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:-
2021 ஆம் ஆண்டு மேட்டூர் அணை திறப்பதற்கான குறிப்பிட்ட ஜூன் 12-ஆம் நாள் அன்று திறக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டில் முன்கூட்டியே மே மாதம் 24 ஆம் நாள் அன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது காவிரி டெல்டா பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வாய்க்கால்கள் திட்டமிடப்பட்டு முறையாக தூர்வாரப்பட்டதனால் காவிரி நீர் கடைமடை வரை சென்று பயிர்கள் செழித்தன. இதன் பயனாக 2021- 22 ஆம் ஆண்டில் 46.2 லட்சம் டன் அளவில் 202-23 ஆம் ஆண்டில் 45.9 லட்சம் செலவிலும் காவிரி பாசன பகுதியில் நெல் உற்பத்தி செய்யப்பட்டு மிகப்பெரிய சாதனையை படைத்தோம் உற்பத்தியும் பெருகியது.
காவிரி டெல்டா பகுதியில் உள்ள அனைத்து வாய்க்கால் பகுதிகளிலும் திட்டமிடப்பட்டு தூர்வாரப்பட்டதால் கடைமடை வரை மேட்டூர் அணை நீர் சென்றது. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மேட்டூர் அணையை சீராக திறந்து விடப்பட்டு வருகிறது.
காவிரி நதிநீர் உரிமையை காப்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் எப்பொழுதும் எந்த சூழலிலும் உறுதியாக இருக்கும் என்ற உறுதி மொழியை இந்த மாமன்றத்திற்கு முதலில் தெரிவிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார்.