என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் இனி ஹெல்மெட் கட்டாயம்
- ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் உயிரிழக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது.
- போக்குவரத்து பூங்காவில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை:
கோவை மாநகரில் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும், வருகிற 26-ந் தேதி முதல் வாகன தணிக்கை மேற் கொள்ளப்பட்டு விதிமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கோவை மாநகர காவல் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகரில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தும் வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.வருகிற 26-ந் தேதி முதல் காவல்துறை, போக்குவரத்து துறை மற்றும் மாசுகட்டுப்பாட்டுத் துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை ஒருங்கிணைத்து பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் அதிகப்படியாக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் குறித்து விரிவாக ஆராய்ந்ததில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் உயிரிழக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது.
எனவே 100 சதவீதம் விபத்துக்களை தடுக்கும் வகையில், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற நடைமுறையை 100 சதவீதம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வருகிற 26-ந் தேதி முதல் நகரில் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் பின்னால் அமர்ந்து வரும் நபர்கள் மீது மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்களுக்கு ஒருவார காலததுக்கு போக்குவரத்து பூங்காவில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்