என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிட மல்லுகட்டும் காங்கிரஸ் நிர்வாகிகள்
- விளவங்கோடு தொகுதியில் மீண்டும் பெண் வேட்பாளர் களம் இறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
- கடந்த தேர்தலில் அ.தி.மு.க.-பாரதிய ஜனதா இணைந்து இந்த தொகுதியில் போட்டியிட்டன. இந்த முறை கூட்டணி இல்லாததால் 2 கட்சிகளும் தனித்து களம் காண்கின்றன.
நாகர்கோவில்:
பாராளுமன்ற தேர்தலோடு ஏப்ரல் 19-ந்தேதி குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கட்சிகள் செல்வாக்கு பெற்ற இந்த தொகுதியில் கடந்த 3 தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் காங்கிரசை சேர்ந்த விஜயதரணி.
இவர் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அதோடு தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினமா செய்தார். இதனை தொடர்ந்தே இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதி மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்கப்படும் என தெரிகிறது.
இதனை கருத்தில் கொண்டு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் காய் நகர்த்தி வருகின்றனர். காங்கிரஸ் சார்பில் இங்கு யார் நிறுத்தப்பட்டாலும் வெற்றி உறுதி என கூறப்படுகிறது. அதன் காரணமாகவே மாவட்டத்தின் முக்கிய தலைவர்கள் டெல்லி மற்றும் சென்னையில் முகாமிட்டு முக்கிய தலைவர்களின் ஆதரவை பெற முயன்று வருகின்றனர்.
காங்கிரஸ் சார்பில் குமரி மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங், ஜவகர்பால் மஞ்ச் அமைப்பின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் சீட் பெறுவதில் முனைப்பு காட்டி வரு கின்றனர். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்த்தாண்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, இந்த தொகுதியில் மகளிர் வேட்பாளர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்தார்.
எனவே விளவங்கோடு தொகுதியில் மீண்டும் பெண் வேட்பாளர் களம் இறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. மாவட்ட மகளிர் அணி தலைவியும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலருமான சர்மிளா ஏஞ்சல் உள்ளிட்ட பலரும் தேர்தல் களத்தில் உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளும் உள்ளதால் விளவங்கோடு தொகுதியில் வெற்றி உறுதி என்பதால், காங்கிரஸ் நிர்வாகிகள் தொகுதியை பெறுவதில் மல்லுக்கட்டி வருகின்றனர்.
கடந்த தேர்தலில் அ.தி.மு.க.-பாரதிய ஜனதா இணைந்து இந்த தொகுதியில் போட்டியிட்டன. இந்த முறை கூட்டணி இல்லாததால் 2 கட்சிகளும் தனித்து களம் காண்கின்றன. பாரதிய ஜனதா சார்பில் கடந்த முறை போட்டியிட்ட ஜெயசீலனே மீண்டும் போட்டியிடுவார் என தெரிகிறது. அ.தி.மு.க. சார்பில் நாஞ்சில் டொமினிக் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்