என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கவர்ச்சி நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டது நடன பள்ளி மாணவிகள்- வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு
- கவர்ச்சி நடனம் சர்ச்சையானதை தொடர்ந்து திருச்சி ரெயில்வே போலீஸ் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
- பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காமல் அனுமதி இன்றி நுழைந்தது தொடர்பாக அந்த 3 பேருக்கும் சம்பவத்தன்று ரூ.1120 அபராதம் விதித்து ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் அவர்களை எச்சரித்து அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி:
சமீப காலமாக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு இடையே ரீல்ஸ் மோகம் அதிகரித்துவிட்டது. சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போட்டு லைக்குகளை பெறுவதற்காக எல்லை மீறிய வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் 3 இளம்பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ், பனியன் அணிந்து மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே என்ற பாடலுக்கு கவர்ச்சிகரமாக ஆடி அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் வந்துள்ளது. பொதுவாக பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் முன் அனுமதி இல்லாமல் இது போன்ற வீடியோக்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கவர்ச்சி நடனம் சர்ச்சையானதை தொடர்ந்து திருச்சி ரெயில்வே போலீஸ் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் வீடியோ வெளியிட்ட இளம்பெண்கள் திருச்சி தில்லை நகரை சேர்ந்த நடன பள்ளி மாணவிகள் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காமல் அனுமதி இன்றி நுழைந்தது தொடர்பாக அந்த 3 பேருக்கும் சம்பவத்தன்று ரூ.1120 அபராதம் விதித்து ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் அவர்களை எச்சரித்து அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது வீடியோ வைரலாகி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட 3 இளம்பெண்கள் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய ரெயில்வே போலீசாரும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதை அறிந்த அந்த நடன பெண்கள் தங்கள் பதிவுகளை நீக்கி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்