search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவள்ளூர் அருகே காக்களூர் ஏரிக்கரையில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு-வாக்குவாதம்
    X

    திருவள்ளூர் அருகே காக்களூர் ஏரிக்கரையில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு-வாக்குவாதம்

    • காக்களூர் சாலை சந்திப்பினை விரிவாக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் தலைமையில் இன்று காலை ஆக்கிரமிப்ப வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றும்பணி தொடங்கியது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர் ஊராட்சியை இணைக்கும் இடத்தில் காக்களூர் ஏரி உள்ளது. இந்த காக்களூர் ஏரிக்கரையை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள், கடைகள் கட்டப்பட்டு உள்ளன.

    இந்தநிலையில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காக்களூர் சாலை சந்திப்பினை விரிவாக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிக்கு இடையூறாக காக்களூர் ஏரிக்கரையில் ஆக்திரமித்து கட்டப்பட்ட வீடுகள் இருந்தன. இதையடுத்து அந்த ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் தலைமையில் இன்று காலை ஆக்கிரமிப்ப வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றும்பணி தொடங்கியது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். திருவள்ளூர் தாலுக்கா இன்ஸ்பெக்டர் கமலஹாசன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×