என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் நிச்சயம் வெல்லும்- தினேஷ் குண்டுராவ்
- காங்கிரஸ் வேட்பாளர் குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.
- எதிரணியில் உள்ளவர்கள் யார் போட்டியிடுகிறார்கள் என்பதே இன்னும் தெரியவில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை காங்கிரசார் வற்புறுத்தி வந்த நிலையில் அவர் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டார்.
அவருக்கு பதில் தனது மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டதை அடுத்து, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சத்தியமூர்த்தி பவனில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத்திடம் நேரில் கருத்து கேட்டார். பின்னர் சஞ்சய் சம்பத் ஈரோடு தொகுதியில் போட்டியிட தினேஷ் குண்டுராவிடம் விருப்ப மனு கொடுத்தார்.
இதைதொடர்ந்து, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது கட்சி மேலிடம் முடிவு செய்யும். காங்கிரஸ் வேட்பாளர் குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.
எதிரணியில் உள்ளவர்கள் யார் போட்டியிடுகிறார்கள் என்பதே இன்னும் தெரியவில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் நிச்சயம் வெற்றிபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.






