search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. சட்ட விதிகளில் மாற்றம் செய்ததை அங்கீகரிக்க முடிவு செய்தோம்- டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு
    X

    அ.தி.மு.க. சட்ட விதிகளில் மாற்றம் செய்ததை அங்கீகரிக்க முடிவு செய்தோம்- டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளருக்கு ஆதரவாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
    • அ.தி.மு.க. மாநாடு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் பதில் மனு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    கடந்த ஆண்டு அ.தி.மு.க.வில் சட்டவிதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. இதன் பின்னர் பொதுக்குழு மூலமாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். கட்சி விதிகளில் மேற்கொள்ளப்பட்ட இது போன்ற மாற்றங்களுக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளருக்கு ஆதரவாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இதன் அடிப்படையிலேயே அ.தி.மு.க. கட்சி விதிகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தை அங்கீகரிக்க முடிவு செய்தோம். அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளில் எந்த மாதிரியான தீர்ப்பு வருகிறதோ? அதனையும் பின்பற்றுவோம்.

    சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் வழக்குகளின் போது தற்போதைய நிலையில் மாற்றம் ஏற்படும் வகையில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டால் அதற்கேற்ப எங்களின் முடிவு இருக்கும்.

    இவ்வாறு டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. மாநாடு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் மனு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    Next Story
    ×