search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளக்குறிச்சி விவகாரம்: பெற்றோர் இல்லாமல் மறுகூராய்வு தொடங்க உயர்நீதிமன்றம் அனுமதி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கள்ளக்குறிச்சி விவகாரம்: பெற்றோர் இல்லாமல் மறுகூராய்வு தொடங்க உயர்நீதிமன்றம் அனுமதி

    • உச்ச நீதிமன்றம் தடை விதிக்காததால், மறு உடற்கூராய்வு நடைமுறையை தொடங்கலாம் என உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
    • கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள மாணவியின் வீட்டில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் மாணவி ஸ்ரீமதி பள்ளி மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நேற்று ஐகோர்ட்டு சில உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய அறிவுறுத்தியதுடன் தனியாக டாக்டர் குழுவை நியமிக்க அறிவுறுத்தி இருந்தது.

    அப்போது மாணவியின் தந்தை தரப்பில் தங்கள் தரப்பில் டாக்டர் ஒருவரையும் பிரேத பரிசோதனையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஐகோர்ட்டு ஏற்க மறுத்த நிலையில் மாணவியின் தந்தை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தங்கள் தரப்பு கோரிக்கை ஐகோர்ட்டில் ஏற்கப்படாததால் மாணவியின் பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மாணவியின் தந்தை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டது.

    இதற்கிடையே, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் மறு பிரேத பரிசோதனை இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள மாணவியின் வீட்டில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளனர்.

    இந்நிலையில், உச்ச நீதிமன்றம் தடை விதிக்காததால், மறு உடற்கூராய்வு நடைமுறையை தொடங்கலாம் என உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை பெற்றோர் இல்லாமல் மறுகூராய்வு செய்யவும் ஐகோர்ட் அனுமதித்துள்ளது. மேலும், பெற்றோர் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து தெரியவில்லை என்று காவல்துறை தரப்பில் நீதிபதியிடம் முறையிடப்பட்டது. அதற்கு, பெற்றோர் வந்தால் அனுமதிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    உச்சநீதிமன்றம் தடை உத்தரவு எதுவும் விதிக்காததால் மறுஉடற்கூராய்வு நடைமுறையை தொடங்க வாய்மொழியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×