என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கோத்தகிரி அருகே சாலையில் வந்த காரை தூக்கிய ஒற்றை காட்டு யானை
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளிலும், தேயிலைத் தோட்டங்களிலும், சாலைகளிலும் உலவுகின்றன.
கடந்த வாரம் கூட யானைக்கூட்டம் ஒன்று சாலையில் வந்த வாகன ஓட்டிகளை ஓட ஓட விரட்டியது. அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், சுற்றுலாப்பயணிகளும் அந்த அச்சத்தில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வழக்கம் போல் வாகனங்கள் சென்ற வண்ணம் இருந்தன. அதிகாலை நேரத்தில் முள்ளூர் பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை சாலையின் நடுவே வந்து நின்று கொண்டது. நீண்ட நேரமாக எங்கும் செல்லாமல் அங்கே உலவியது.
இதனால் சாலையின் இருபுறமும் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. சிலர் யானையை புகைப்படம் எடுக்க முற்பட்டனர்.
அப்போது திடீரென கோபம் அடைந்த யானை அங்கு நின்றிருந்த 5-க்கும் மேற்பட்ட வாகனங்களை தாக்கி கண்ணாடியை உடைத்தது. மேலும் யானையை முந்தி செல்ல முயன்ற வேனின் கண்ணாடியையும் உடைத்தது.
தொடர்ந்து சாலையில் நின்றிருந்த காரை நோக்கி யானை வந்தது. யானை வருவதை பார்த்ததும் காரில் இருந்தவர்கள் பயத்தில் சத்தம் போட்டனர். வந்த வேகத்தில் யானை காரை ஆக்ரோஷமாக தூக்கியது.
இதனால் காரில் இருந்தவர்கள் அலறினர். பின்னர் அங்கேயே காரை போட்டு விட்டு சென்று விட்டது. சிறிது நேரம் கழித்து யானை அங்கிருந்து அருகே உள்ள தேயிலை தோட்டத்துக்குள் சென்று விட்டது.
அதிர்ஷ்டவசமாக யானை காரை தூக்கி வீசாததால் காரில் இருந்த யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.யானை சென்றதும் வாகன ஒட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் இரவில் செல்லும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது. எனவே வனத்துறை அதிகாரிகள் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்