search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மணப்பாறை அருகே ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
    X

    மணப்பாறை அருகே ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

    • ரங்கசாமி பார்த்திபனின் ஜேசிபி வாகனத்தை அவருக்கு தெரியாமல் விற்று விட்டார்.
    • லஞ்சம் கொடுக்க விரும்பாத பார்த்திபன் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மருங்காபுரி கண்ணூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன். பொறியியல் பட்டதாரியான இவர், சொந்தமாக ஜேசிபி வாகனத்தினை வைத்து தொழில் செய்து வருகிறார்.

    இவரது வாகனத்தினை விராலிமலையைச் சேர்ந்த நண்பர் ரங்கசாமி என்பவரிடம் கடந்த 2001 ஆம் ஆண்டு வாடகைக்கு விட்டுள்ளார். மேற்படி ரங்கசாமி பார்த்திபனின் ஜேசிபி வாகனத்தை அவருக்கு தெரியாமல் விற்று விட்டார். இதனை அறிந்த பார்த்திபன், கடந்த 19.3.2022 அன்று ரங்கசாமி மீது புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் புத்தாநத்தம் காவல்துறையினர் பார்த்திபனின் ஜேசிபி வாகனத்தை கண்டுபிடித்து மணப்பாறை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். மணப்பாறை நீதிமன்றத்தில் இருந்து தனது ஜேசிபி இயந்திரத்தை திரும்ப பெற இயலாத பார்த்திபன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். உயர்நீதிமன்றம் பார்த்திபனிடம் ரூ. 5 லட்சம் சொத்து மதிப்பு சான்றிதழ் மணப்பாறை நீதிமன்றத்தில் வழங்கிவிட்டு இயந்திரத்தை பெற்றுக்கொள்ளஉத்தரவு பிறப்பித்துள்ளது.

    பார்த்திபன் சொத்து மதிப்பு சான்றிதழ் வேண்டி மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 6-ந் தேதி அன்று விண்ணப்பம் செய்தார். அந்த மனுவானது கண்ணூத்து கிராம நிர்வாக அலுவலர் அமீர்கானிடம் வரப்பட்டுள்ளது.

    இதனை அறிந்த பார்த்திபன் நேற்று 24.7.23 காலை கண்ணூத்து கிராம நிர்வாக அலுவலர் அமீர்கானை சந்தித்து சொத்து மதிப்பு சான்றிதழ் பெற பரிந்துரை செய்ய கோரியுள்ளார்.

    அதற்கு கிராம நிர்வாக அலுவலர் அமீர்கான் ரூ.5000 கொடுத்தால் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.

    லஞ்சம் கொடுக்க விரும்பாத பார்த்திபன் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு துறையினர் வழங்கிய ஆலோசனைபடி வி.ஏ.ஓ. அமீர்கானிடம் பார்த்திபன் ரூ.5000 லஞ்சமாக கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அமீர்கானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×