என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![மழைநீர் வடிகால் பணி... மாநகராட்சி ஆணையர் விளக்கம் மழைநீர் வடிகால் பணி... மாநகராட்சி ஆணையர் விளக்கம்](https://media.maalaimalar.com/h-upload/2023/10/10/1963595-radhakrishnan.webp)
X
மழைநீர் வடிகால் பணி... மாநகராட்சி ஆணையர் விளக்கம்
By
மாலை மலர்25 Dec 2023 11:57 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சென்னையில் மருத்துவ முகாம்கள் மூலம் 5.64 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
- மழைக்கு பின் தொற்றுநோய் எதுவும் பரவவில்லை.
சென்னை :
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் 100 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துவிட்டன. சென்னை மாநகராட்சியில் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் 42 சதவீத வடிகால் பணிகள் முடிந்துள்ளன.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் 876 கிலோ மீட்டருக்கு மழைநீர் வடிகால்கள் போடப்பட்டுள்ளன. 876 கி.மீ. பணிகள் நடைபெற்றதால் தான் 60 விழுக்காடு தண்ணீர் 48 மணி நேரத்திற்குள் வடிந்தது.
சென்னையில் மருத்துவ முகாம்கள் மூலம் 5.64 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். மழைக்கு பின் தொற்றுநோய் எதுவும் பரவவில்லை. மருத்துவ முகாம்கள் தொடரும் என்றார்.
Next Story
×
X