என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நன்றாக சாப்பிட்டு தெம்பாக போராடுங்கள்...
- வாயு கசிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆய்வு செய்தார்.
- தொழிற்சாலையின் நுழைவு வாயில் முன்பு 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு அளித்தார்.
சென்னை:
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 26-ந்தேதி நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து தனியார் உர தொழிற்சாலையை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், வாயு கசிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆய்வு செய்தார். இதன்பின் தொழிற்சாலையின் நுழைவு வாயில் முன்பு 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு அளித்தார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடையே பேசிய சீமான், உண்ணாவிரத போராட்டத்தால் எந்த பயனும் இல்லை. நன்றாக சாப்பிட்டு தெம்பாக போராட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.