search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
    X

    எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    • பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (16526, 16236) செப்டம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் நிற்காது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக மாநிலம் பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வருகிற செப்டம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பெங்களூரு கண்டோன்மென்டில் நிற்காது.

    அதன்படி, பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் லால்பாக், டபுள் டக்கர், மெயில் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (வண்டி-எண்-12608, 22626, 12658) செப்டம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் நிற்காது.

    அதே தேதிகளில், சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் டபுள் டக்கர், பிருந்தாவன், லால்பாக், சதாப்தி ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களும் (22625, 12639, 12607, 12027) பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் நிற்காது.

    கன்னியாகுமரி-பெங்களூரு, தூத்துக்குடி-மைசூரு, சென்னை சென்ட்ரல்-பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (16525, 16235, 12657) செப்டம்பர் 19-ந்தேதி முதல் டிசம்பர் 19-ந்தேதி வரை பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் நிற்காது.

    அதே போல, பெங்களூரு-கன்னியாகுமரி, மைசூரு-தூத்துக்குடி இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (16526, 16236) செப்டம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் நிற்காது.

    மைசூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16022), சென்ட்ரலில் இருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16021) செப்டம்பர் 19-ந்தேதி முதல் டிசம்பர் 19-ந்தேதி வரை பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் நிற்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×