என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
துணைவேந்தர்களை அரசே நியமிப்பது மானியக்குழு சட்டத்துக்கு புறம்பானது- தமிழக ஆளுநர்
- ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப்பட்டிருந்த நிலையில் சில விளக்கங்களை தமிழக ஆளுநர் கேட்டுள்ளார்.
- துணை வேந்தர்களை அரசே நியமித்தால் அது அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கும்.
பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்துக்கு புறம்பானது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் மசோதா தொடர்பாக விளக்கம் அளிக்ககோரி தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதியுள்ளார். ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப்பட்டிருந்த நிலையில் சில விளக்கங்களை தமிழக ஆளுநர் கேட்டுள்ளார்.
துணை வேந்தர்களை அரசே நியமித்தால் அது அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கும் எனவும் ஆளுநர் ரவி கருத்து தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக தர நிர்ணயம் மத்திய பட்டியலில் இருப்பதால் புதிய மசோதாக்கல் குறித்து விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் உள்பட சுமார் 10 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிக்க மசோதா தாக்கலாகியிருந்தது. சட்டபேரவையில் தாக்கலாகி ஆளுநருக்கு அனுப்பிய மசோதா சுமார் 4 மாதங்களாக நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.