search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
    X

    அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு

    • மாநில ஊழியருக்கான அகவிலைப்படியை 01.01.2024 முதல் 9 சதவீதம் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம், அகவிலை ஊதியத்தில் 239 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,

    2016-ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வகையில் மாநில ஊழியருக்கான அகவிலைப்படியை 01.01.2024 முதல் 9 சதவீதம் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம், அகவிலை ஊதியத்தில் 239 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

    ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகை நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு சேவை மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×