search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
    X

    முல்லைபெரியாறு அணை

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

    • கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 47.18 அடியாக உள்ளது. 147 கன அடி நீர் வருகிறது.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    தற்போது முதல் போக சாகுபடி நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அணையின் நீர்மட்டத்தை பொறுத்து நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மதுரை குடிநீர் திட்டத்துக்காக லோயர்கேம்ப் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனால் குடிநீர் பம்பிங் செய்வதில் பிரச்சனை ஏறுபட்டது. கூடலூர், உத்தமபாளையம், கம்பம், காமயகவுண்டன்பட்டி, கோம்பை, பண்ணைபுரம், தேவாரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு முல்லைப்பெரியாறு அணை மூலமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 119.40 அடி நீர்மட்டம் உள்ளது. 526 கன அடி நீர் வருகிறது. நேற்று வரை 400 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று நீர்திறப்பு 500 கன அடியாக உயர்த்தப்பட்டது.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.18 அடியாக உள்ளது. 147 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர்திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 79.01 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    பெரியாறு 7, தேக்கடி 0.6, உத்தமபாளையம் 1, சண்முகாநதி அணை 1.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×