search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீலகிரியில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு- பொதுமக்கள் கடும் அவதி
    X

    நீலகிரியில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு- பொதுமக்கள் கடும் அவதி

    • விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதால் காய்கறி மண்டிகளுக்கு காய்கறி வரத்து மிகவும் குறைந்து வருகிறது.
    • காய்கறி மண்டிகளில் விற்கப்படும் அனைத்து வகை காய்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து உள்ளது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிலுக்கு அடுத்தபடியாக மலைத் தோட்ட காய்கறிகள்தான் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த சில வாரங்களாக கோடை அனல் வெயில் கொளுத்தி வருவதால் குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் தோட்டங்களில் பயிரிட்டு உள்ள விளைபொருட்களுக்கு தண்ணீர் பாய்ச்ச இயலாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அங்கு விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதால் காய்கறி மண்டிகளுக்கு காய்கறி வரத்து மிகவும் குறைந்து வருகிறது.

    இதனால் நீலகிரி மாவட்டத்துக்கு சமவெளி பகுதியில் இருந்து மட்டுமே காய்கறிகள் வரத்து இருப்பதால், அங்கு காய்கறிகளின் விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு கிலோ பீன்ஸ் ரூ.200, அவரை-ரூ.180, கேரட்-ரூ.80, உருளைக்கிழங்கு ரூ.80, முருங்கைக்காய் ரூ.200, ப்ரக்கோலி ரூ.240 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் காய்கறி மண்டிகளில் விற்கப்படும் அனைத்து வகை காய்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து உள்ளது.


    இனிவரும் நாட்களில் கடும் வறட்சி ஏற்பட்டு வெயில் தாக்கம் அதிகரிக்க கூடும் என வானிலை நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளதால் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். நீலகிரி மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென அதிகரித்து உள்ளதால், கவலை அடைந்து உள்ள இல்லத்தரசிகள், தமிழக அரசு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்க ஏதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×