என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நள்ளிரவில் வி.ஏ.ஓ.வின் கார் தீவைத்து எரிப்பு- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
- முதல் கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கார் எரிக்கப்பட்டது தெரிய வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து காரை தீ வைத்து எரித்தவர்களை தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் வடகுடி வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று தனக்கு சொந்தமான காரை பட்டினச்சேரி புயல் பாதுகாப்பு மையம் அருகே நிறுத்தி வைத்து விட்டு வீட்டுக்கு சென்றார்.
அப்போது நள்ளிரவு 1 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் காருக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடினர். கார் பற்றி எரிந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், தண்ணீர் ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் காரின் முன்பகுதி முற்றிலுமாக எரிந்து நாசமானது.
இது குறித்து செல்வமணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் நாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கார் எரிக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காரை தீ வைத்து எரித்தவர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.